
திருகோணமலைக்கு வருகை தந்து வடக்கு மற்றும் கிழக்கு விசேடமாக திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறிக் கொண்டு பௌத்த சின்னங்களை அங்கு வைப்பதற்கு தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுப்பதாகவும், இவரை போல பலரை சந்தித்துள்ளதாகவும், எவ்வித காரணத்திற்காகவும் எமது செயற்பாடுகளை நிறுத்த முடியாது” எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (18) கூறியிருந்தார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் “எமது தமிழர் தாயகத்தினை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது எனவும் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிப்பதோடு; இச் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு இனியும் இருக்க மாட்டோம் எனவும் கூறினார்.
அத்தோடு NPPஅரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது எனவும் தனது கண்டன அறிக்கையினை வெளியிட்டிருந்தார்.



