மகளிர் உலகக் கிண்ணம்: இந்திய அணி வெற்றி

Date:

மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று (30) இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி, போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி, இந்திய அணி 47 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய மகளிர் அணி சார்பில் டீப்தி ஷர்மா 53 ஓட்டங்களையும் மற்றும் அமன்ஜோத் கவுர் 57 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இனோகா ரணவீர 4 விக்கெட்டுக்களையும் மற்றும் உதேஷிகா பிரபோதினி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, டக்வோர்த் லூயிஸ் முறைபடி, இலங்கை அணிக்கு 271 என்ற ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 271 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதன்படி, இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணித் தலைவர் சமரி அதபத்து அதிகபட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஓய்வூதியச் சட்டத்தை நீக்க அமைச்சரவை ஒப்புதல்

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு...

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் நியமனம்

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம்...

கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் தொகை மீட்பு

பேருவளை கடலில் சந்தேகத்துக்கிடமான முறையில் மிதந்து வந்த இரண்டு பொதிகளை மேல்...

GMOA தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு

தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும்...