‘முழு நாடும் ஒன்றாக’ எனும் போதைப்பொருள் எதிர்ப்பு செயற்திட்டத்தின் தென் மாகாண நிகழ்ச்சித் திட்டம் இன்று (20) ஹம்பாந்தோட்டையில் பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (20) பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் தொடங்கப்படவுள்ளது.
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும்நோக்கில் தற்போதைய அரசாங்கத்தின் முழு நாடும் ஒன்றாக தேசிய பிரச்சாரத்தின் இரண்டாம் கட்டமாக இம் முயற்சி செயல்படுத்தப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்நாட்டின் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒக்டோபர் 30 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.



