இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Date:

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, கடந்த 28 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (01) நண்பகல் 12.10 அளவில் முதலைப்பாலை, பலகொல்லாகம, ராஜாங்கனை, எப்பாவல, மெதிரிகிரிய, பள்ளித்திடல் மற்றும் வாகரை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‘களுபோவில சுட்டி’யும் அவரது சகோதரரும் கைது

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் இரண்டு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை...

மின்சார சபை பொறியாளர்களின் எச்சரிக்கை

இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் தொழிற்சங்க சங்கமானது இன்று (06) முதல்...

இன்றைய வானிலை முன்னெச்சரிக்கை

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை செய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக்...

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை...