ரஜரட்ட பல்கலையில் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுப்பு
ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர உபவேந்தரை நியமிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் தீர்வு கிடைக்காததால் தொழிற்சங்க போராட்டம் தொடர்வதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சங்கம் இன்று (3) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் உடனடியான தீர்வுகளை வழங்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் தலைவர், பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
