யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில், அவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்று இரவு ஹோட்டலில் உணவருந்திக்கொண்டிருந்தபோது, எம்.பி. மற்றும் இரண்டு நபர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் போது தாக்குதல் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.