06 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

Date:

மழையுடனான வானிலை எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பின்னர் மேலும் அதிகரிக்கக்கூடுமெனவும் 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கே அமைந்துள்ள வளிமண்டலத்தில் குறைந்த அழுத்தப் பகுதி உருவாகுவதே இந்த நிலைமைக்குக் காரணம் என்று அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது இலங்கைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், மழை பெய்யும் நிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நிலவும் மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் அந்த திணைக்களத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியாளர் எச்.எம். ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தொல்பொருளியல் சட்டத்தில் திருத்தம் : 14 பேர் கொண்ட குழு நியமனம்

தொல்பொருளியல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை...

SLFP கட்சி உறுப்பினர்கள் 8 பேரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக 2026ஆம் ஆண்டுக்கான வரவு -...

மீன்பிடி படகுடன் அறுவர் கைது

இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்டிய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும்...

150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் நுண்ணுயிர் கொல்லி, மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து,...