கண்டி- கொழும்பு வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

கொழும்பு – கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (22) காலை கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கணேதென்ன பகுதியில் அமைந்துள்ள கடையொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேர் மீட்கப்பட்டு மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கடையானது சிற்றுண்டி மற்றும் தேநீர் வாங்குவதற்கு பிரபலமான இடம் என தெரிவிக்கப்படுகின்றது.
