
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும்
மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச(தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு 26ஆம் திகதியான இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் அருளை பெறுவதற்கும்இ தாம் செய்யும் பாவங்களில் இருந்து வெளிபடுவதற்கும் ஏற்ற மிக சிறந்த விரத நாளாக சொல்லப்படுவது மகா சிவராத்திரி நாளாகும்.
உலகிற்கே தலைவனாக இருக்கக் கூடிய, சிவ பூஜையின் மகத்துவத்தை உணர்த்தக் கூடிய நாளாக இருக்கும் மகா சிவராத்திரி வழிபாடு எந்த தலத்தில் தோன்றியது என்ற புராண காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான, முதன்மையான விரதமான மகாசிவராத்திரி விரதத்தின் சிறப்புக்களை பற்றி சொல்லாத புராணங்களே கிடையாது. சிவ பெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட திருநாளையே மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இந்த நிகழ்வு எங்கு நடைபெற்றது? மகாசிவராத்திரி விரதம், வழிபாடு தோன்றிய தலம் எது? என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மகா சிவராத்திரி வரலாறு: மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இந்த நாளில் தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்ட போதுஇ அவர்களது சண்டை யைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்ற சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார் அந்த நெருப்புப் பிழம்பு மண்ணுக்கும்இ விண்ணுக்கும் பரவி மிகப் பிரம்மாண்டமாக காட்சி அளித்தது.
சிவராத்திரி தோன்றிய வரலாறு: தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னதும் கோபப்பட்ட
சிவபெருமான், நெருப்புப் பிழம்பில் இருந்து வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார். விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்குஇ பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலரா வாய் என்றும் சாபமிட்டார்.
இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில். இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்து தான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.
லிங்கோத்பவர் வழிபாடு: இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் ‘லிங்கோத்பவர்’ வடிவில் காட்சி கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது.
மாசி மாத சிவராத்திரி அன்று இந்த நிகழ்வு நடந்தததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி தோன்றிய தலம் திருவண்ணாமலையே.
திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்கு பரவியது.
மகா சிவராத்திரி விரத முறை: நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் உறங்கக்
கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் தொடங்க வேண்டும்.
ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளை கொண்டு பூஜிக்கலாம். பின்னர் நைவேத்தியம்
படைத்து வழிபட வேண்டும்.
மகா சிவராத்திரி விரத பலன்கள்: சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கி விடும். இவர்தான் சிவராத்திரிவிரதம் இருக்கலாம்.
இவர் இருக்கக் கூடாது என எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். பூமி தானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைபிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்தானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதற்கு ஈடாகாது.
மகா சிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
சிவலோக வாசம் கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும்இ நிறைந்த மங்கல வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரியின் சிறப்புகள்: சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.
- சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும். சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.
- சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.
- எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
- சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ…. என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.
- சிவராத்திரியன்று திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.
- சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.
- கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.
- திருவதிகை தலத்தில் உள்ள வீரட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.
- பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன் “சங்கர மற்றும் நாராயண” வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் “பாண லிங்கம்” இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.
- மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.
- ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப் பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.
- சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.
- திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.
- கருட புராணம், கந்த புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
- சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
- ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா குளியல் செய்த பலனும் தரவல்லது சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். மகா சிவராத்திரி பூஜை காலங்கள் முதல் கால பூஜை – மலை 6:30 முதல் இரவு 9:30 மணி வரை இரண்டாம் கால பூஜை – இரவு 9:30 முதல் நள்ளிரவு 12:30 மணி வரை மூன்றாம் கால பூஜை – நள்ளிரவு 12:30 முதல் அதிகாலை 3:30 மணி வரை நான்காம் கால பூஜை – அதிகாலை 3:30 முதல் காலை 6:00 மணி வரை மகா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும்.
சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
சிவராத்திரியின் போது, இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபட வேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக்
கூறுகின்றன.

முதல் யாமம்: இந்த முதல் கால பூஜைஇ படைக்கும் தேவன் ‘பிரம்மா’ சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த கால பூஜையில் “பஞ்ச கவ்வியத்தால்” (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமியம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப்பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு
நற்பலன்களை அடையலாம்.
இரண்டாம் யாமம்: இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் ‘விஷ்ணு’. சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து,
நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.
மூன்றாம் யாமம்: இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து ‘எள் அன்னம்’ நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காம் யாமம்: இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து
செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக. அறிவியலை இணைக்கும் மகா சிவராத்திரி
‘லூமினிபெரஸ் ஈத்தர்’ (Luminiferous Eather) எனப்படும் ஒரு பிரம்மாண்ட பிரபஞ்ச சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே அதி வேகத்தில் பூமியை நேரடியாக வந்து இறங்கும்.
இந்த நேரத்தில் தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது.
எனவேதான் மகா சிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது. இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது. மேலும் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறது.
பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் இரண்டு நீள்வட்ட பாதையில் உள்ளது. ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை.
பூமி பெரிய நீள்வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதிக்கும் மாறும் நேரம் தான் இந்த மகா சிவராத்திரி நேரம். மேலும் ஈத்தர் என்ற சக்தி எப்பொழுதும் பூமியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது.
வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தி சற்று அதிகமாக இருக்கும். ஆனால், வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரி மட்டும் அபரிமிதமாக, அளவுக்கு அதிகமாக சக்தி இருக்கும். இதற்கு நிகர் வேறு எந்த மதமும் இருப்பதில்லை. எனவேதான் இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைக்கிறார்கள்.
அனைவருக்கும் மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்