ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு : மற்றொரு துப்பாக்கிதாரி கைது

ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 16ஆம் திகதி நடைபெற்ற இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்ததோடு, இரண்டு சிறுவர்கள் காயமுற்றனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மற்றுமொரு துப்பாக்கிதாரி கடந்த மார் 03ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Similar Posts