பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களை ஆய்வு செய்வதற்காக சோதனைகளை நடத்தத் தொடங்கியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI) தெரிவித்துள்ளது.
பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சுமார் 1750 பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் ஆய்வுகளின் போது சோதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
டிசம்பர் 01 முதல் இன்று வரை நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.
