பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு : 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் இன்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பள்ளிவாசலில் இன்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில் வெடிகுண்டு கட்டிக்கொண்டு வந்த நபர் ஒருவர் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைய முயன்றுள்ளார்.

அவரது நடவடிக்கையில் ஏற்பட்ட சந்தேகத்தினால் அங்கிருந்தவர்கள் வாசல் அருகே அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் 31 பேர் உயிரிழந்துள்ளதோடு 169 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தெஹ்ரிக் – இ தலிபான் இயக்கத்துடன் தொடர்புடைய பிட்னா அல் – குவாராஜி அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Similar Posts