அமெரிக்காவில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்க தலைநகரான வொஷிங்டன் அருகே, ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரர்களுடன் வந்த இராணுவ ஹெலிகாப்டரும் புதன்கிழமை (29) இரவு மோதி வெடித்து சிதறியதில் 67 பேர் உயிரிழந்தனர்.
விமானமும் ஹெலிகாப்டரும் வெடித்து பல பாகங்களாக பொடோமேக் ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆற்றின் தட்பவெப்பம் 2 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பதால், 24 மணிநேரம் கழிந்த நிலையில், 28 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை உயிருடன் ஒருவர் கூட மீட்கப்படவில்லை என்பதால், யாரும் உயிருடன் இருப்பதில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் ஆற்றில் இருந்து கண்டெடுத்துள்ளனர். விமானிகளின் பேச்சுக்களையும் ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.