கைதான பொது மேலாளருக்கு விளக்கமறியல்

முறைக்கேடு தொடர்பில் கைதான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால்அமைப்பு சபையின் ஓய்வுபெற்ற முன்னாள் பொது மேலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

வாகனமொன்றை பயன்படுத்தியதின் மூலம் அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைதானார்.

கைதானவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Similar Posts