நானுஓயா மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய “எல்ல ஒடிசி நானுஓயா” ரயில் சேவை நாளை (10) முதல் ஆரம்பிக்கப்படும்.
சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு, இந்த சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ரயில் சேவை செவ்வாய்க்கிழமையை தவிர மற்ற அனைத்து வார நாட்களிலும் காலை 8.10 மணிக்கு நானுஓயாவில் இருந்து பதுளைக்கு, பிற்பகல் 1 மணிக்கு பதுளையிலிருந்து கண்டி நோக்கி இயக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.