அர்ச்சுனாவுக்கு பிணை

கொழும்பு – புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நிறுத்தி வைத்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இன்று விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான், அனுமதியை வழங்கியுள்ளார்.

இதன்படி அவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar Posts