பண்டாரகம – கம்மன்பில ஏரிக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வணிகக் கடற்படை வீரராகப் பணியாற்றிய பண்டாரகம- அந்துன்வென்ன பகுதியிலுள்ள 26 வயதுடைய அகில சந்தீப என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கார் வீதியை விட்டு விலகி, ஒரு மின் கம்பத்தில் மோதி, சுமார் 15 அடி சரிவில் உருண்டதாலயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து, பண்டாரகமவில் பல பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரசபை ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயிரிழந்தவர் தூங்கியதால் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.