விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (27) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அதற்கமைய, 50 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் யோஷித ராஜபக்சவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, கடந்த 25 ஆம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
இரத்மலானை, சிறிமல் பகுதியில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணி வாங்கியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னரே, அவரை இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை மேலதிக நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது