மகளிருக்கான 3 ஆவது பிரீமியர் லீக் போட்டி இன்று (14) ஆரம்பமாகிறது. மார்ச் 15 ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் வதோதரா, பெங்களூரு, லக்னோ, மும்பை, ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறன.
இதில் நடப்பு சாம்பியன்ஸான, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் உ.பி.வாரியாஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாடும். 2 ஆவது, 3 ஆவது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும். 11 ஆம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறன. 13 ஆம் திகதி எலிமினேட்டர் போட்டி நடைபெற்ற நிலையில் மார்ச் 15 ஆம் திகதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.
வதோதராவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க போட்டியில் பெங்களூரு -குஜராத் அணிகள் மோதுகின்றன.