இலங்கைக்கான Westminster Foundation for Democracy (WFD) அலுவலகம், 2025 ஜனவரி 21 முதல் 24 வரை பிலிப்பைன்ஸ் முஸ்லிம் மின்டானாவோவில் (BARMM) அமைந்துள்ள பாங்க்சமோரோ தன்னாட்சிப் பகுதி அரசியல் கட்சித் தலைவர்களுக்காக ஓர் பிராந்திய கற்றல் முகாமை நடாத்தியது.

இந்த நிகழ்வு, அரசியல் கட்சிகளின் மேம்பாடு, நிர்வாகம், மற்றும் மோதலுக்குப் பிந்தைய அரசியல் மாற்றங்கள் குறித்து சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ள ஒரு வலுவான வாய்ப்பாக அமைந்தது.
பாங்க்சமோரோ பகுதி, இலங்கை போல், முக்கிய அரசியல் மாற்றங்களை எதிர்கொண்டு, பல தசாப்தங்களாக நீடித்த உள்ளூர் மோதலுக்கு பின்னர், ஒரு அமைதியான மற்றும் உள்ளடக்கிய ஜனநாயக அமைப்பை உருவாக்க போராடி வருகிறது.

இலங்கையில் தேர்தல் முறைகள் மற்றும் ஜனநாயக ஆட்சி தொடர்பான அனுபவங்களை, பாங்க்சமோரோவின் அரசியல் வளர்ச்சிக்கான வழிகாட்டியாக பயன்படுத்தக்கூடியதாக இந்த முயற்சி அமைந்தது.
இதேவேளை, இந்த பாங்க்சமோரோ குழு, இலங்கையின் பல்வேறு அரசியல் மற்றும் தேர்தல் பங்காளிகள் ஆகிய NPP, SJB, UNP, SLPP, SLMC, ITAK கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டது.