தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீர் கட்டணத்தை 10% முதல் 30% வரை குறைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்களில் குறைப்பு செய்யப்படும் நிலையில், நீர் கட்டணங்களையும் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக அந்த சபையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும், இந்த குறைப்பு தொடர்பான விஷயங்களை ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை அடுத்த சில நாட்களில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவரிடம் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பின்னர் அது தொடர்பான முன்மொழிவுகள் அரசரவை முன் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.