வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் ஒரு இராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதால் விபத்துக்குள்ளாகி இரண்டாகப் பிளைந்தது.
இதையடுத்து, அருகிலுள்ள போடோமாக் ஆற்றில் மீட்பு குழுவினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், வாஷிங்டனுக்கு அருகிலுள்ள விமான நிலையத்தில் புறப்படும் மற்றும் தரையிறங்கும் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்த எமது செய்தியாளர் myreport360 க்கு தெரிவித்தார்.
மேலும், ஹெலிகாப்டர்கள் மூலம் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வாஷிங்டனில் விமான விபத்து: அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் இராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் பெரும் சேதம்!
Date: