சர்வதேச கிரிக்கெட் பேரவையால் (ICC) 2024ஆம் ஆண்டுக்கான ஆண்கள் இருபதுக்கு 20 ஓவர் அணியை அறிவித்துள்ள நிலையில், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க அந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
அவர் இந்த அணியில் 9வது இடத்தில் உள்ளார். இந்த அணிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார்.
இந்த அணியில் இந்திய அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் இடம் பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை.
எனினும், 2024 டி-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்கள் டி20 அணி விபரம்:
ரோஹித் சர்மா (இந்தியா)
டிராவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா)
பில் சோல்ட் (இங்கிலாந்து)
பாபர் அசாம் (பாகிஸ்தான்)
நிக்கோலஸ் பூரன் (மேற்கிந்திய தீவுகள்)
சிக்கந்தர் ராசா (சிம்பாப்வே)
ஹர்திக் பாண்டியா (இந்தியா)
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
வனிந்து ஹசரங்க (இலங்கை)
ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)
அர்ஷ்தீப் சிங் (இந்தியா)