
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 3-ஆவது வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
அத்துடன் நேற்றைய ஆட்டத்தில் களத்தடுப்பிலும் மாபெரும் சாதனை படைத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் விராட் 2 கேட்சுகள் பிடித்ததோடு . ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பிடித்த கேட்சுகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பிடியெடுப்புக்க்ள எடுத்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
இதனையும் சேர்த்து ஐ.சி.சி. நடத்தும் ஒருநாள் உலகக்கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் ரி20 உலகக்கிண்ணம் தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் விராட் கோஹ்லி 5 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். ஐ.சி.சி. தொடர்களில் வேறு எந்த வீரரும் குறிப்பிட்ட ஒரு அணிக்கெதிராக மூன்று முறைக்கு மேல் ஆட்ட நாயகன் விருது வென்றதில்லை.
அந்த வகையில் ஐ.சி.சி. தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். மேலும் இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.