சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சு மீது விதிக்கத் திட்டமிட்டிருந்த தடைகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சீர்குலைவதைத் தவிர்க்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அந்த அதிகாரிகள் மேலும் குறிப்பிடுகையில்,
சீனாவின் உளவு முகவரகம் மற்றும் அமெரிக்க தொலைத்தொடர்பு வலையமைப்புக்களில் ஊடுருவல் செய்ய பயன்படுத்தப்படும் ஒப்பந்த குழுவாகக் கருதப்படும் சால்ட் டைபூன் என்பவற்றின் மீது தடைகளை விதிக்க அமெரிக்கா ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.
எனினும் அமெரிக்க, சீனா ஜனாதிபதிகளுக்கு இடையில் தென் கொரியாவில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு, ட்ரம்பின் சீன விஜயம், முக்கிய அரிய கனிய வளங்களுக்கு சீனாவில் தங்கியிருப்பதை தவிர்ப்பதற்கு நேரகாலம் எடுத்துக் கொள்ளல் என்பவற்றுக்காக அமெரிக்க நிர்வாகம் சீனாவுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது.
அதிலும் ஏப்ரல் மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயம் பாதிக்கப்படுவதை ட்ரம்ப் விரும்பவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



