உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இரு முக்கிய வழிமுறைகளைப் பற்றிய உடன்பாட்டை எட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) கவனம் செலுத்தி வருகின்றன.
சில உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாகப் போட்டியிடும் யோசனை மற்றும் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்த பின் இணைவது போன்ற முன்மொழிவுகள் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக SJBவின் உயர்மட்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பான கலந்துரையாடல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இந்தப் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொண்டு செல்லுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆலோசனை வழங்கியுள்ளார்.