கொள்ளுப்பட்டியில் உள்ள DSI கட்டிடத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (15) காலை கட்டிடத்தின் நடைபாதையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் 65 முதல் 70 வயதுக்கு இடைப்பட்டவராகவும், 05 அடி 08 அங்குல உயரம் கொண்டவராகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளுப்பிட்டியில் அடையாளம் தெரியாத சடலம்
Date: