நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் மரணம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டின் போது ஏற்பட்ட காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் பல காயங்களால் ஏற்பட்டதால் சஞ்சீவ உயிரிழந்துள்ளதாக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான இரண்டு நாள் நீதவான் நீதிமன்ற விசாரணையின் முடிவில் தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையில், கனேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையையும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.