கெஹல்பத்தர பத்மே, பெக்கோ சமனிடம் விசாரணை

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே மற்றும் பெக்கோ சமன் ஆகியோரிடம், நடந்து வரும் விசாரணைகள் தொடர்பாக பொலிஸார் நீண்ட நேரம் விசாரித்தனர்.

சந்தேக நபர்கள் மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் காவலில் உள்ள சம்பத் மனம்பேரி, மித்தெனியவில் உள்ள அவருக்குச் சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்குரிய இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க இன்று (21) மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு அழைத்து வரப்படவுள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் சிறப்பு அனுமதியின் கீழ் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Similar Posts