ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வு இன்று (24) இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மனித உரிமைகள் பேரவை அமர்வு இதுவாகும்.
குறித்த அமர்வில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு ஞாயிற்றுக்கிழமை (23) ஜெனீவா சென்றுள்ளது.
மேலும், மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, பங்கேற்கும் நாடுகளைச் சேர்ந்த அரசு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவும் அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
முந்தைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை எதிர்க்க அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
மேலும் இது ஒக்டோபர் 7 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.