ஐ.நா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

தெற்கு சூடானில் தாக்குதலை அதிகரித்ததற்கு ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெற்கு சூடானில் தீவிரமடைந்து வரும் வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தற்போது நடந்து வரும் மோதலால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒரு கோடி மக்களின் உயிரைக் காப்பாற்ற, மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றது. அனைத்துத் தரப்பினரும் உடனடியாக அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.

பேச்சுவார்த்தை மூலம் பதற்றங்களைக் குறைக்க வேண்டும். சர்வதேச சட்டத்தை நிலைநாட்டவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

மேலும், பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான மனிதாபிமான உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts