உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் நான் ஜனாதிபதி பதவியை விட்டு விலகத் தயாராகவே இருக்கிறேன் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன்-ரஷ்யாவுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்கிடையே, ‘உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சர்வதிகாரிபோல் செயற்படுகிறார். இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார் என ட்ரம்ப் ஜெலன்ஸ்கி மீது குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் ஊடக சந்திப்பில் இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியதாவது:
“உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். உக்ரைனுக்கு நோட்டோ உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்.ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு ட்ரம்ப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மிகவும் தேவை. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ட்ரம்ப் மத்தியஸ்தராக இருக்க வேண்டும்” என்றார்.