அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பாக துருக்கியில் இரு நாடுகளும் ஆலோசனை நடத்தியுள்ளன.
இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரகம் நேற்று (28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஷ்யா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்தப் பேச்சுவாத்தை மிகவும் ஆக்கபூா்வமானதாகவும் தொழில்ரீதியிலானதாகவும் இருந்தது. இதுவரை இல்லாத வகையிலான தொழில் நடவடிக்கைகளை இரு தரப்பினரும் பரஸ்பரம் மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினா்.
அந்தப் பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.