கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் தொகை மீட்பு

பேருவளை கடலில் சந்தேகத்துக்கிடமான முறையில் மிதந்து வந்த இரண்டு பொதிகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து மீட்டுள்ளனர்.

இப் பொதிகள் ஒவ்வொன்றும் சுமார் 100 கிலோகிராம் எடை கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் பொதிகளில் போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந் நடவடிக்கையானது கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலுக்கான முயற்சியாக இருந்திருக்கலாம் எனவும் அது தோல்வியடைந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar Posts