3 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது

கிரிபத்கொட பகுதியில் 3 கிலோ 18 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவரும் குறித்த போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் நேற்று (03) இரவு களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருத்துவமனை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிளொன்றை சோதனை செய்தபோது அதில் 3 கிலோ ஹெரோயின் மற்றும் ஒரு கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட் சந்தேக நபர் கிரிபத்கொடயைச் சேர்ந்த 34 வயதானவர்.

சந்தேக நபரை மேலும் விசாரித்தபோது, அவருக்கு இந்த போதைப்பொருள் தொகையை வழங்கிய மற்றொரு சந்தேக நபர் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

அதன்படி இரண்டாவது சந்தேக நபரும் கட்டுநாயக்க, கண்ணுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 32 வயதான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான இரு சந்தேக நபர்களும் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar Posts