கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட உதார நிர்மல் குணரத்ன மற்றும் நளின் துஷாந்த ஆகிய இரண்டு சந்தேக நபர்களும் இன்று (03) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த தலைமை நீதவான், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும், கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கையடக்கத்தொலைபேசி சிம் அட்டைகளைப் பெறுவதற்கு இந்த சந்தேக நபர்கள் உதவி செய்ததாகவும், அதன்படி சந்தேகத்தின் பேரில் அவர்களைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.