அக்குரேகொடையில் துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு
பத்தரமுல்லை – அக்குரேகொடையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
அக்குரேகொடையில் உள்ள வர்த்தக அங்காடி நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் ரக வாகனத்தில் இருந்த இரண்டு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் தப்பிச் சென்றுள்ளார்.