டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் மீட்பு
மன்னார் கடற்பரப்பில் இன்று (14) டிங்கி படகும், இரண்டு பொதிகளும் கைப்பற்றப்பட்டதோடு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார் கடற்பரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதிகள் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அதில் 50 கிலோகிராமை விட அதிக ஹஷிஷ் போதைப்பொருள் உள்ளமை தெரிய வந்துள்ளது.
கைது செய்யபட்ட இரண்டு சந்தேகநபர்களும், ஹஷிஷ் போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.