முச்சக்கரவண்டி சாரதி கொலை :சந்தேக நபர் கைது

புத்தளம், அடப்பனாவில்லு பகுதியில் நேற்று (22) காலை முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், வடிகான் ஒன்றுக்குள் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இக் கொலைச் சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று இரவு, உயிரிழந்தவரின் வீட்டுக்கு வந்த சந்தேக நபர், அவரை வாடகை பயணத்துக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர், சாரதியின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, சடலத்தை கீழே தள்ளிவிட்டு, முச்சக்கரவண்டியை எடுத்துச் சென்றுள்ளார்.

பின், தேவாலயம் ஒன்றுக்கருகில் முச்சக்கரவண்டியை கைவிட்டுச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருள் பாவனையாளர் என்பதோடு,பணம் மற்றும் முச்சக்கர வண்டியை கொள்ளையிடுவதற்காகவே இக் கொலையைச் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Similar Posts