அமெரிக்காவில் அரச ஊழியர்கள் இராஜினாமா

Date:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக கொள்கைகளினால், அந்நாட்டு அரச ஊழியர்கள், 3 இலட்சம் பேர் இந்தாண்டு இறுதிக்குள் இராஜினாமா செய்யவுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக இன்று (30) ஒரு இலட்சம் பேர் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் நிர்வாக செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக தானாக முன்வந்து அரச ஊழியர்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்வதை இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

அவர் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து, இன்று ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான அரசஊழியர்களின் இராஜினாமா இன்று நடைபெறவுள்ளது. இந்த எண்ணிக்கை இந்தாண்டு இறுதிக்குள் 3 இலட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பின் கொள்கைகள், பெண்கள் மற்றும் சிறுபான்மை இன ஊழியர்களை பெரியளவில் பாதித்துள்ளது. கடந்த ஜூன் மாத இறுதிக்குள், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட கறுப்பின பெண்கள் தங்கள் வேலைகளை விட்டு வெளியேறினர்.

முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் நீண்டகால ஊழியர்கள் வெளியேறுவதால், அரசின் நிர்வாக அறிவும், நிபுணத்துவமும் பெரியளவில் இழக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், இதை மீண்டும் கட்டியமைக்க பல ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.அரச ஊழியர்களின் இந்த இராஜினாமாவால் பல முக்கிய அரச சேவைகள் தீவிரமாக பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்தில் பேரணி

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் தீவிர முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி...

இ.தொ.கா வின் 20 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்சந்தோஷ் ஜாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச்...

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் உலகளாவிய அறிவியல்...

எதிர்க்கட்சித் தலைவர் கடத்தல்

உகாண்டாவில் தேர்தல் வன்முறை வெடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தினரால் பலவந்தமாக...