நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரையிலான ஊர்வலம் மற்றும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறும் விசேட ஆராதனை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, அன்றைய தினம் காலை 7 மணி முதல் 11.45 மணி வரை கடலோர பொலிஸ் பிரிவில் உள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

Similar Posts