டொராண்டோ நகரத்தில் கடுமையான பனிப்புயல்: போக்குவரத்து பாதிப்பு

டொராண்டோ நகரத்தில் கடுமையான பனிப்புயல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நகரம் முழுவதும் சுமார் 60 செ.மீ. பனி பெய்துள்ளது. இதனால் சாலைகள், வீதிகள் பனியில் மூழ்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நகர மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வாகனங்கள் முன் பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரிகள் இதனை முக்கிய வானிலை நிகழ்வு என அறிவித்து, தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்
