நேர்மையான திருட்டு எண்ணம் இல்லாத நபர்களையே தலைவர்களாக்க வேண்டும் என்று மக்கள் கோரினார்கள். ஆனால், சந்தர்ப்பவாதிகளும் பொய்காரர்களுமே மக்களுக்கு ஆட்சியாளர்களாக கிடைத்துள்ளதாக சர்வசன அதிகாரம் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியை மக்கள் நிராகரிக்கிறார்கள். எனவே, தேசிய மக்கள் சக்திக்கான மாற்றுத் தெரிவு சர்வசன அதிகாரம் கூட்டணியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘மக்கள் விடுதலை முன்னணிக்கு என்னவானது. அறியாமையினால் பிறந்த நபர் அறியாமையினாலேயே இல்லாமல் போவார். அதனை இல்லாமல் செய்ய முடியாது. நூற்றுக்கு 3 சதவீதம் மாத்திரம் உரிமையான உணர்வே தவிர சாதாரண நபர் ஒருவருக்குள்ள உணர்வல்ல.
கெளரவமிக்க, நேசமிக்க அரசியல் செய்யும்போது இதுபோன்ற நிலை ஏற்படாது. தேசிய மக்கள் சக்தியினர் மக்களுக்கு சலித்துவிட்டனர். திசைக்காட்டியில்லை பதக்கமே சிறந்த தெரிவு என்று அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
மக்கள் கேட்ட விடயங்கள் பதக்கம் சின்னத்திடமே இருக்கிறது. நேர்மையான, திருட்டு எண்ணம் இல்லாத நபர்களை மக்கள் தேடினார்கள். ஆனால், சந்தர்ப்பவாதிகளும் பொய்காரர்களுமே மக்களுக்கு கிடைத்துள்ளார்கள். அதனை சரி செய்துகொள்ள வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக பதக்கம் சின்னத்தை வெற்றிப்பெறச் செய்வோம்’’ என்றார்.