அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், டிக்டாக் செயலி மீண்டும் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. டிக்டாக் சேவையை தொடர தகுந்த உத்தரவை வழங்கிய டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள டிக்டாக் நிறுவனம், நீண்ட கால தீர்வுகளை உருவாக்க டிரம்ப் உடன் இணைந்து செயல்படவும் உறுதிபட தெரிவித்துள்ளது.
இந்தியாவில், இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸ் துவங்குவதற்கு முன், டிக்டாக் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால், 2020ஆம் ஆண்டு, பாதுகாப்பு காரணங்களால் மத்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இதனால், இந்தியாவில் டிக்டாக் செயலி செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதன்பின்னரே ரீல்ஸ் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், உலகின் பல்வேறு நாடுகளில் டிக்டாக் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அமெரிக்காவில், டிக்டாக்கின் தகவல்கள் சீன அரசுடன் பகிரப்படுவதாகக் கூறி, அமெரிக்க அரசு டிக்டாக்குக்கு தடை விதித்தது. மேலும், டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் மட்டுமே தடை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் முற்றிலும் மறுத்து வந்தது.
அதனால், அமெரிக்க நிறுவனத்திற்கு டிக்டாக் விற்பனை செய்யப் போவதில்லை என்று பைட் டான்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதனால், டிக்டாக்குக்கு தடை உறுதியாக அமெரிக்கா கூறிய நிலையில், பைட் டான்ஸ் நீதிமன்றம் சென்றது. வழக்கு தொடரப்பட்ட பின்னரும், தடை நீக்கப்படாமல் அமலுக்கு வந்தது.
ஆனால், அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே அமெரிக்காவில் டிக்டாக் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதுகுறித்து பைட் டான்ஸ் நிறுவனம், “டிக்டாக் சேவையை வழங்க தேவையான உத்தரவை அளித்த ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி. டிக்டாக்கை நீண்ட காலம் அமெரிக்காவில் செயல்படச் செய்ய தேவையான தீர்வுக்காக டிரம்ப் உடன் பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளது. மேலும், டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை 90 நாட்களுக்கு ஒத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மீண்டும் செயல்படும் டிக்டாக்
Date: