கொஸ்கமவில் துப்பாக்கிச் சூடு : மூவர் கைது

அவிசாவளை – கொஸ்கம பகுதியில் கடந்த 3ஆம் திகதி முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய சம்பவம் தொடர்பில் மூவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தும்மோதர பகுதியில் வைத்தே ஹோமாகம குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர், சந்தேக நபர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கியவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ரிவால்வர் மற்றும் ஒரு கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ருவன்வெல்ல, தும்மோதர பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar Posts