இராஜகிரிய பகுதியில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபரின் மரணத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் இச்சந்தேக நபர்களை சனிக்கிழமை (08) ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாகத் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி 06 ஆம் திகதி, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடைக்குள் விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சடலத்தின் பிரேத பரிசோதனையில் தலையில் ரத்தக்கசிவு மற்றும் உடலில் ரத்தக்காயங்கள் இருந்ததால், இது கொலை என உறுதிசெய்யப்பட்டது.
அதன்படி, சம்பவம் இடம்பெற்ற கடையில் பணியாற்றிய மூவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22, 24, மற்றும் 30 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அகரபத்தனை, நமுனுகுல, மற்றும் பன்னிலதென்ன பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.