சுற்றுலாப் பயணியிடம் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று (07) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி காவல்துறையில் பணியாற்றும் ஒரு சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.