நாட்டில் நேற்றைய தினம் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கமைய, கல்டெங்வெவ – ஹிரிபிட்டிய வீதியில் உள்ள தங்கொல்லாகம பகுதியில் மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சேலை சிக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் நிகதலுபொத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஆவார்.
இதேவேளை, பத்தேகம – வந்துரப வீதியில் சுதுவெலிபத பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சுதுவெலிபொத்த பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
மேலும் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நினைவு மேம்பாலம் அருகேஇ கொழும்பில் இருந்து கண்டி நோக்கிய வீதியில் இருந்து பாதசாரிகள் கடக்க முடியாத இடத்தில்இ அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வீதியை கடக்கும் நபர் மீது மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரிஇ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பேலியகொட பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.