அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறுவர் கொண்ட குழு, ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த மூவரை வெட்டிக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொலைச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 07.30 மணியளவில் இடம்பெற்றதுடன், உயிரிழந்தவர்கள் முறையே 29, 34இ மற்றும் 45 வயதுடையவர்களாவர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினருக்கிடையேயான நீண்டகால தகராறின் விளைவாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.