மிஹிந்தலை நகரில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட கைகலப்பில், மிஹிந்தலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த மிஹிந்தலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர், ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் மற்றும் உணவக ஊழியர் ஆவார்.
வாக்குவாதம் நடந்த உணவகத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இருந்ததாகவும், வாக்குவாதம் தாக்குதலாக மாறியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குழு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினரையும் தாக்கியதாகவும். சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் மற்றும் உணவக ஊழியர் ஆகியோர் மிஹிந்தலை மருத்துவமனையிலும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.